ஜனவரியில் உணவு பணவீக்கம் 39. 22%

ஜனவரியில் உணவு பணவீக்கம் 39. 22% உணவல்லா பொருட்களின் பணவீக்கம் 60.78%

by Bella Dalima 21-02-2023 | 6:40 PM

Colombo (News 1st) 2023 ஜனவரி மாதத்திற்கான தேசிய நுகர்வோர் விலைச்சுட்டெண் தொடர்பான தரவுகளை தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வௌியிட்டுள்ளது. 

2023 ஜனவரி மாதத்திற்கான தேசிய நுகர்வோர் விலைச்சுட்டெண்,  2021 ஆம் ஆண்டுக்கான அடிப்படைப் புள்ளிகளை பின்பற்றும் வகையில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. 

இதற்கமைய, ஜனவரி மாதத்திற்கான தேசிய நுகர்வோர் விலைச்சுட்டெண் அடிப்படையிலான பணவீக்கம் 53.2 வீதமாக காணப்படுகிறது. 

இதில் உணவு பணவீக்கம் 39. 22 வீதமாகவும் உணவல்லா பணவீக்கம் 60.78 வீதமாகவும் உள்ளது. 

இதேவேளை, தேசிய நுகர்வோர் விலைச்சுட்டெண் கடந்த டிசம்பர் மாதத்தில் 200. 4 புள்ளிகளாகக் காணப்பட்ட நிலையில், ஜனவரி மாதத்தில் 201.8 புள்ளிகளாக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.