.webp)
Colombo (News 1st) வடக்கில் இருந்து கிழக்கு நோக்கி பயணித்த பேரணியில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்ததாக கூறி 07 பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு எதிர்வரும் மே மாதம் 08ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு இன்று(20) யாழ்.நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே நீதவான் A.A.ஆனந்தராசா வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார்.
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, வடக்கில் இருந்து கிழக்கிற்கான பேரணி கடந்த 04ஆம் திகதி முன்னெடுக்கப்பட்டது.
பாராளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன், சார்ள்ஸ் நிர்மலநாதன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ஈஸ்வரபாதம் சரவணபவன், M.K.சிவாஜிலிங்கம், முன்னாள் யாழ்.மாநகர முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் மற்றும் வேலன் சுவாமிகள் உள்ளிட்டவர்களுக்கு எதிராகவே வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.