ஐக்கிய மக்கள் சக்தியின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் மீது கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம்

by Staff Writer 20-02-2023 | 3:10 PM

Colombo (News 1st) ஐக்கிய மக்கள் சக்தியின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தைக் கலைப்பதற்காக பொலிஸாரால் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நியூஸ்பெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார்.

கொழும்பு - டெக்னிக்கல் சந்தியில் வைத்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் மீது பொலிஸாரால் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.