சில அத்தியாவசிய மருந்துகளுக்கு கட்டுப்பாட்டு விலை?

சில அத்தியாவசிய மருந்துகளுக்கு கட்டுப்பாட்டு விலையை அறிமுகப்படுத்த திட்டம்

by Staff Writer 19-02-2023 | 2:35 PM

Colombo (News 1st) தெரிவு செய்யப்பட்ட சில அத்தியாவசிய மருந்துகளுக்கு விசேட கட்டுப்பாட்டு விலையை அறிமுகப்படுத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

அதற்காக விசேட வைத்திய நிபுணர்கள் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பான அறிக்கையை இரு வாரங்களுக்குள் ஒப்படைக்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.

நீரிழிவு நோய், இருதய நோய் உள்ளிட்ட அத்தியாவசிய மருந்துகளுக்கே இவ்வாறு கட்டுப்பாட்டு விலை அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

சந்தையில் மருந்துப் பொருட்களின் விலைகள் தொடர்ச்சியாக அதிகரித்து வருவதை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இதன்போது தெரிவித்துள்ளார்.