நடிகர் மயில்சாமி காலமானார்

நடிகர் மயில்சாமி காலமானார்

நடிகர் மயில்சாமி காலமானார்

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

19 Feb, 2023 | 3:24 pm

Colombo (News 1st) தென்னிந்தியாவின் பிரபல நகைச்சுவை நடிகர் மயில்சாமி தமது 57ஆவது வயதில் இன்று(29) அதிகாலை காலமானார்.

உடல்நலக் குறைவினால் அவர் காலமானதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உடல்நல குறைவினால் சென்னை போரூரிலுள்ள வைத்தியசாலை ஒன்றுக்கு இன்று(19) அதிகாலை அழைத்து செல்லப்பட்ட போதிலும், அங்கு செல்லும் முன்பே அவரின் உயிர் பிரிந்து விட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

கில்லி, தூள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான திரைப்படங்களில் நடித்து தமக்கெ தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்