.webp)

Colombo (News 1st) எதிர்வரும் திங்கட்கிழமை (20) உயர் நீதிமன்றத்தில் நகர்த்தல் பத்திரமொன்றை தாக்கல் செய்யவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தேர்தலை முன்னெடுக்க ஏனைய தரப்பினரிடம் இருந்து போதுமான ஒத்துழைப்பு கிடைக்கவில்லையென குறிப்பிட்டு இந்த நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்யப்படவுள்ளது.
குறிப்பிட்ட திகதியில் தேர்தலை நடத்துவதாக உயர் நீதிமன்றில் தேர்தல்கள் ஆணைக்குழு கடந்த நாட்களில் உறுதியளித்து.
உறுதிமொழியை நிறைவேற்ற முடியாமல் போனமையை சுட்டிக்காட்டி இந்த நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்யப்படவுள்ளது.
