.webp)
Colombo (News 1st) மின்சார கட்டண அதிகரிப்பிற்கு எதிர்ப்புத் தெரிவித்து மக்கள் போராட்டத்தின் பிரஜைகள் அமைப்பினர் இன்று எரிசக்தி அமைச்சிற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதிகரித்த மின் கட்டணத்தை செலுத்தப் போவதில்லை என தெரிவித்து, மின்சாரப் பட்டியல்களையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் எரித்தனர்.
மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகரவை சந்திப்பதற்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் அனுமதி கோரிய போதிலும் அதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை.