.webp)

Colombo (News 1st) மினுவாங்கொடை - பொரகொடவத்தையில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்றிரவு 9.45 அளவில் இந்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.
ஆடிஅம்பலம் பகுதியை சேர்ந்த 30 வயதான ஒருவரே துப்பாக்கிச்சூட்டில் கொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த போது, ஒழிந்திருந்த ஒருவரால் துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எனினும், துப்பாக்கிச்சூட்டை நடத்திய நபர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.
மினுவாங்கொடை பொலிஸாரால் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
