.webp)
Colombo (News 1st) சர்வதேச நாணய நிதியத்தின் கடன் மார்ச் மாதத்தில் கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
அரிசி ஆலை உரிமையாளர்களை நேற்று (16) சந்தித்த போதே ஜனாதிபதி இதனை கூறினார்.
உற்பத்தி செலவு அதிகரிப்பு மற்றும் வங்கிக் கடன்களுக்கான வட்டி அதிகரிப்பு காரணமாக தாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் அரிசி ஆலை உரிமையாளர்கள் இதன்போது ஜனாதிபதிக்கு தௌிவுபடுத்தியுள்ளனர்.