சபரகமுவ பல்கலை மாணவர்கள் இடையே மோதல்; 9 பேர் காயம்

சபரகமுவ பல்கலைக்கழக மாணவர்கள் இடையே மோதல்; 9 பேர் காயம்

by Staff Writer 16-02-2023 | 10:00 AM

Colombo (News 1st) சபரகமுவ பல்கலைக்கழக மாணவர்கள் சிலருக்கிடையே ஏற்பட்ட மோதலில் 9 பேர் காயமடைந்துள்ளனர். 

சபரகமுவ பல்கலைக்கழக முகாமைத்துவ பீடத்தின் முதலாம் ஆண்டு மாணவர்கள் மற்றும் விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்கள்  இடையே நேற்றிரவு(15) மோதல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் காயமடைந்த 09 மாணவர்கள் பலாங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.