.webp)
India: BBC ஊடக வலையமைப்பின் இந்தியாவில் உள்ள அலுவலகங்களில் வருமானவரித்துறை சோதனை நடத்தப்பட்டுள்ளது.
இந்திய பிரதமர் நரேந்திர மோடியை விமர்சிக்கும் ஆவணப்படம் அமெரிக்காவில் ஒளிபரப்பப்பட்டதை அடுத்து, இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டதாக BBC தெரிவித்துள்ளது.
புது டெல்லி மற்றும் மும்பையில் உள்ள BBC அலுவலகங்களில் விசாரணைகள் இடம்பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி 2002 ஆம் ஆண்டில் குஜராத் முதல்வராக இருந்தபோது, முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்ற வன்முறைகளில் அவரின் பங்கு எவ்வாறு இருந்தது என்பது தொடர்பில் குறித்த ஆவணப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆவணப்படம் திரையிடப்பட்ட நிலையில், தமது கிளை அலுவலகங்களில் சோதனைகள் நடத்தப்பட்டுள்ளதாக BBC தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், விசாரணை அதிகாரிகளுக்கான ஒத்துழைப்பை தாம் வழங்குவதாகவும் BBC கூறியுள்ளது.