ஐக்கிய மக்கள் சக்தியின் பொருளாதார திட்டம் வௌியீடு

by Bella Dalima 14-02-2023 | 8:26 PM

Colombo (News 1st) ஐக்கிய மக்கள் சக்தியின் எதிர்கால பொருளாதார திட்டம் இன்று வௌியிட்டு வைக்கப்பட்டது.

இது தொடர்பிலான நிகழ்வு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் தலைமையில் கொழும்பில் நடைபெற்றது.

கடன்பொறியில் இருந்து விடுபட்டு, நிலையான அபிவிருத்தியை நோக்கி செல்லும் விதம் குறித்து ஐக்கிய மக்கள் சக்தி தமது எதிர்கால பொருளாதாரத் திட்டத்தை தௌிவுபடுத்தியுள்ளது.

இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான  10 விடயங்கள் தொடர்பில் இதில் விபரிக்கப்பட்டுள்ளது.

கலாநிதி ஹர்ஷ டி சில்வா, எரான் விக்ரமரத்ன, கபீர் ஹஷிம் ஆகியோர் அங்கம் வகிக்கும் ஐக்கிய மக்கள் சக்தியின் பொருளாதாரக் கொள்கைகள் பிரிவு இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது.

Blueprint 2.0 எனும் இந்த பொருளாதார திட்டம் பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் நிலையான வளர்ச்சிக்கான 10 விடயங்களை உள்ளடக்கியது. 

அவையாவன...

1. வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறல்

2. கடன் நெருக்கடி முகாமைத்துவம்

3. பணவியல் மற்றும் மாற்று விகிதக் கொள்கை

4. வருமான ஒருங்கிணைப்பு

5. செலவினக் கட்டுப்பாடு

6. வர்த்தகம், தொழில், விவசாயம் மற்றும் சேவைகள் மேம்பாடு

7.  அரச துறை முகாமைத்துவம் மற்றும் டிஜிட்டல் மயமாக்கல்

8. ஆற்றல் மற்றும் பயன்பாட்டு சீர்திருத்தம்

9.  சந்தை பொருளாதார சீர்திருத்தம் 

10. வலுவான சமூக பாதுகாப்பு வலையமைப்பு