.webp)
Colombo (News 1st) சர்வதேச போட்டிகளுக்காக இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனைகளுக்கு வழங்கப்படும் கொடுப்பனவு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் நிறைவேற்றுக்குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
சர்வதேச போட்டிகளுக்காக இலங்கை கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு இதுவரை காலமும் வழங்கப்பட்ட 250 அமெரிக்க டொலர் கொடுப்பனவு 750 அமெரிக்க டொலர் வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கட் நிறுவனத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, போட்டிகளில் பங்கேற்கும் மேலதிக வீராங்கனைகளுக்கு வழங்கப்படும் கொடுப்பனவிலும் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இருதரப்பு மற்றும் சர்வதேச போட்டிகளில் வெற்றி பெறும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் வீராங்கனைகளுக்கு 250 அமெரிக்க டொலர் கொடுப்பனவை வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.