.webp)
Colombo (News 1st) ரயில் சாரதிகளால் ஆரம்பிக்கப்பட்ட பணிப்பகிஷ்கரிப்பு இடைநிறுத்தப்பட்டுள்ளது.
ரயில் திணைக்கள அதிகாரிகள் சிலர் மீது மேற்கொள்ளப்பட்டுள்ள ஒழுக்காற்று நடவடிக்கைக்கு எதிராகவே இந்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டது.
குறித்த பிரச்சினைக்கு ரயில்வே பொதுமுகாமையாளரால் தீர்வு பெற்றுக்கொடுக்கப்பட்டதை அடுத்து, பணிப்பகிஷ்கரிப்பு இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இந்த பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக 23 இற்கும் அதிக ரயில் சேவைகள் இன்று(13) முற்பகல் இரத்துச் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.