சந்தேகநபரின் விளக்கமறியல் மேலும் நீடிப்பு

பல்கலைக்கழக மாணவி கொலை: சந்தேகநபரின் விளக்கமறியல் மேலும் நீடிப்பு

by Staff Writer 13-02-2023 | 5:52 PM

Colombo (News 1st) கொழும்பு குதிரைப்பந்தய திடலில் பல்கலைக்கழக மாணவியொருவர் கழுத்து வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபரின் விளக்கமறியல் எதிர்வரும் 27ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர் ​இன்று(13) கொழும்பு பிரதம நீதவான் பிரசன்ன அல்விஸ் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்ட போதே விளக்கமறியல் நீடிப்பு உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. 

மாணவி கொலை செய்யப்பட்ட தினத்தில் சந்தேகநபரான பல்கலைக்கழக மாணவர் அணிந்திருந்த ஆடை, அவர் பயன்படுத்திய கையடக்கத் தொலைபேசி, இரத்த மாதிரிகள் உள்ளிட்ட 11 வழக்கு பொருட்கள் அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்தில் ஒப்படைக்கப்பட்டு அதன் அறிக்கையை பெற்றுக்கொள்வதற்கும் பிரதம நீதவான் இன்று(13) பொலிஸாருக்கு அனுமதி வழங்கினார்.