செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்டோருக்கு பிணை

பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்டோருக்கு பிணை

by Staff Writer 12-02-2023 | 2:19 PM

Colombo (News 1st) கைது செய்யப்பட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட 18 பேருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

தலா 03 இலட்சம் ரூபா சரீரப் பிணையில் பிணை வழங்கப்பட்டுள்ளது.

மீண்டும் அவ்வாறான எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டால், பிணை இரத்து செய்யப்படும் என யாழ்.நீதவான் இதன்போது அறிவுறுத்தியுள்ளார்.

ஜனாதிபதியின் யாழ்.வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்.பஸ் நிலையத்திற்கு முன்பாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் நேற்று(11) ஆர்ப்பாட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 
 
இதன்போது எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட 18 பேர் கைது செய்யப்பட்டனர்.