நிலக்கரி கொள்வனவிற்கு 20 பில்லியன் ரூபா தேவை

நிலக்கரி கொள்வனவிற்கு 20 பில்லியன் ரூபா தேவை - இலங்கை நிலக்கரி நிறுவனம்

by Staff Writer 12-02-2023 | 2:29 PM

Colombo (News 1st) நிலக்கரி கொள்வனவிற்காக இம்மாதம் 20.2 பில்லியன் ரூபா தேவைப்படுவதாக இலங்கை நிலக்கரி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் இலங்கை மின்சார சபையிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை நிலக்கரி நிறுவனத்தின் தலைவர் ஷெஹான் சுமனசேகர குறிப்பிட்டார்.

நிலக்கரி தொகையை ஏற்றிய 03 கப்பல்கள் தற்போது நாட்டை வந்தடைந்துள்ளன.

குறித்த 03 கப்பல்களில் ஒரு கப்பலிலிருந்து நிலக்கரியை இறக்கும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக 
ஷெஹான் சுமனசேகர குறிப்பிட்டார்.

ஏனைய 02 கப்பல்களுக்கும் செலுத்த வேண்டிய கட்டணம் 6.4 பில்லியன் ரூபாவாகும்.

எனினும், அதற்கான பணம் இதுவரை கிடைக்கவில்லை.