அவசரமற்ற சத்திர சிகிச்சைகளை தாமதப்படுத்த தீர்மானம்

அரச வைத்தியசாலைகளில் அவசரமற்ற சத்திர சிகிச்சைகளை தாமதப்படுத்த தீர்மானம் - சுகாதார அமைச்சு

by Staff Writer 12-02-2023 | 2:37 PM

Colombo (News 1st) அரச வைத்தியசாலைகளில் அவசரமற்ற சத்திர சிகிச்சைகளை தாமதப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நிலவும் மருந்து தட்டுப்பாடு மற்றும் சத்திர சிகிச்சைகளுக்கு தேவையான உபகரணங்களின் தட்டுப்பாடு என்பவற்றை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டார்.

வைத்திய பரிந்துரைகளுக்கு அமைய இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

நாட்டின் அரச வைத்தியசாலைகளில் சுமார் 140 மருந்து வகைகளுக்கு தற்போது தட்டுப்பாடு நிலவுவதாக சுகாதார அமைச்சர் குறிப்பிட்டார்.

இவற்றில் 40 வகையான மருந்துகள் இந்த வாரத்திற்குள் கிடைக்கவுள்ளதாக அமைச்சர் கூறினார்.