புத்தளம் - கற்பிட்டியில் கரையொதுங்கிய 14 திமிங்கிலங்களில் 3 உயிரிழப்பு

by Bella Dalima 11-02-2023 | 4:02 PM

Colombo (News 1st) புத்தளம் - கற்பிட்டி, கண்டக்குழியில் இன்று அதிகாலை 14 திமிங்கிலங்கள் கரையொதுங்கியுள்ளன.

கரையொதுங்கிய திமிங்கிலங்களை மீண்டும் கடலில் விடுவதற்கு வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள், கடற்படையினர் மற்றும் கிராம மக்கள் இணைந்து கடும் பிரயத்தனம் மேற்கொண்டனர்.

கரையோதுங்கிய திமிங்கிலங்களில் மூன்று  உயிரிழந்துள்ளதாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஏனைய திமிங்கிலங்கள்  இயந்திரப்படகு மூலம் இழுத்துச்செல்லப்பட்டு மீண்டும் ஆழ்கடலில் விடுவிக்கப்பட்டுள்ளன.

உயிரிழந்த திமிங்கிலங்கள் உடற்கூற்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டவுள்ளதாக கண்டக்குழி வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.