.webp)

Colombo (News 1st) மொனராகலை - வெல்லவாய, புத்தலையில் 3 மெக்னிட்யூட் அளவில் நில அதிர்வு பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இன்று (10) நண்பகல் 12:11 மணியளவில் இந்த நில அதிர்வு பதிவானதாக புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.
பல்லேகல, மஹகனதராவ மற்றும் ஹக்மன ஆகிய இடங்களில் அமைந்துள்ள நில அதிர்வு அளவை நிலையங்களில் (Seismic Stations) இந்த அதிர்வுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க புவியியல் ஆய்வு நிலையத்தின் தகவலின் படி, இந்திய பெருங்கடலில் இரண்டு அதிர்வுகள் பதிவாகியுள்ளன.
வடக்கு சுமத்ராவின் மேற்கு கடற்கரையில் 4.6 மெக்னிட்யூட் நில அதிர்வும் கார்ல்ஸ்பெர்க் ரிட்ஜில் (Carlsberg Ridge) 4.7 நிலநடுக்கமும் பதிவாகியுள்ளன.
