தாயின் இரண்டாவது கணவரின் தாக்குதலால் சிறுவன் பலி

காத்தான்குடியில் தாயின் இரண்டாவது கணவரின் தாக்குதலால் 11 வயது சிறுவன் பலி

by Bella Dalima 10-02-2023 | 3:41 PM

Colombo (News 1st) மட்டக்களப்பு  - காத்தான்குடியில் தாக்குதலுக்கு இலக்காகி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த 11 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார்.

நேற்று முன்தினம் (08) தாக்குதலுக்கு இலக்கான சிறுவன் நேற்று உயிரிழந்ததாக பொலிஸார்  கூறினர்.

இந்த சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு நீதவானுக்கு இன்று அறிக்கை சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த சிறுவனின் தாயின் இரண்டாவது கணவர் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

தாக்குதல் மேற்கொண்ட 26 வயதான இளைஞர் கைது செய்யப்பட்டு, எதிர்வரும் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

மாத்தளையை சேர்ந்த இளைஞரே கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.