வலிகாமம் வடக்கில் விடுவிக்கப்பட்ட காணிகளை துப்புரவு செய்யும் மக்கள்

by Bella Dalima 09-02-2023 | 7:06 PM

Colombo (News 1st) யாழ். வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தில் இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்ட காணிகளை துப்புரவாக்கும் பணிகளில் பொதுமக்கள் ஈடுபட்டுள்ளனர்.

பலாலி வடக்கு அன்ரனிபுரம் மற்றும் காங்கேசன்துறையில் காணிகளை துப்புரவு செய்யும் பணிகளில் காணி உரிமையாளர்கள் இன்று ஈடுபட்டனர்

இலங்கையின் 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு யாழ். வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்திற்குட்பட்ட 13 ஏக்கர் அரச காணி உள்ளிட்ட 108 ஏக்கர் காணி கடந்த 3 ஆம் திகதி விடுவிக்கப்பட்டது. 

யாழ். மாவட்ட இராணுவ தளபதி, பாதுகாப்பு படைகளின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் சுவர்ண போதோட்ட காணி விடுவிப்பிற்கான உத்தரவு பத்திரத்தினை யாழ். மாவட்ட செயலாளர் அம்பலவாணர் சிவபாலசுந்தரனிடம் கையளித்திருந்தார்.