.webp)
Colombo (News 1st) கொழும்பு பல்கலைக்கழக மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு முன்பாக இன்று பகல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மகாபொல புலமைப்பரிசிலை வழங்குமாறு கோரி இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
கொழும்பு பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒன்றியத்தினரால் இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பல மாதங்களாக தடைப்பட்டுள்ள மகாபொல புலமைப்பரிசிலை வழங்குமாறும் முறையற்ற விதத்தில் அதிகரிக்கப்பட்டுள்ள விடுதிகளுக்கான கட்டணத்தை குறைக்குமாறும் விடுதிகளை விஸ்தரிக்குமாறும் மாணவர்கள் இதன்போது கோரிக்கை விடுத்தனர்.
கொழும்பு பல்கலைக்கழகத்தின் பிரதான நுழைவாயிலுக்கு முன்பாக ஆரம்பித்து பிரதான வீதியூடாக மாணவர்கள் பேரணியொன்றையும் முன்னெடுத்தனர்.
ஒரு மணித்தியாலமாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தரப்பினர் பின்னர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.