சுமதி விருது வழங்கல் விழாவில் மூன்று விருதுகளை சுவீகரித்த நியூஸ்ஃபெஸ்ட், சிரச தொலைக்காட்சி

by Bella Dalima 09-02-2023 | 10:34 PM

Colombo (News 1st) சுமதி விருது வழங்கல் விழா இன்று (09) மாலை நடைபெற்றது. 

2023  சுமதி விருது  வழங்கும்  விழா இன்று மாலை கலைஞர்களின்  பங்களிப்புடன் ஆரம்பமாகியது. 

சுமதி விருது வழங்கும் விழாவில் வாழ்நாளில் ஒருமுறை மாத்திரமே வழங்கப்படும் U.W. சுமதிபால விருது இம்முறை மூத்த பாடகி இந்திராணி பெரேராவிற்கும்  மூத்த நடிகர் சனத்  குணதிலக்கவிற்கும் வழங்கி கௌரவிக்கப்பட்டது. 

2023 சுமதி  விருது வழங்கல் விழாவின் சிறந்த தொலைக்காட்சி செய்தி அறிக்கையிடலுக்கான விருதை நியூஸ்ஃபெஸ்ட்டின் ரந்திக்க ஹெட்டியாரச்சி  சுவீகரித்துக்கொண்டார். 

ஆண்டின் சிறந்த செய்தி வாசிப்பாளருக்கான மூன்றாம் இடத்தை நியூஸ்ஃபெஸ்ட்டின் குஷானி பாரிஸ் பெற்றுக்கொண்டார். 

சிரச தொலைக்காட்சியின் வாசனா லக்மாலி , சிறந்த மகளிர் தொகுப்பாளினிக்கான விருதை சுவீகரித்துக் கொண்டார். 

இம்முறை 2020  மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில்  தொலைக்காட்சியில்  ஔிபரப்பப்பட்ட நிகழ்ச்சிகளை அடிப்படையாகக் கொண்டு விருதுகள் வழங்கப்பட்டன.