59இலங்கை பெண்களை ஓமானிலிருந்து அழைத்துவர நடவடிக்கை

ஓமானில் இருந்து 59 இலங்கை பெண்களை நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை

by Bella Dalima 09-02-2023 | 6:44 PM

Colombo (News 1st) ஓமானில் பாதுகாப்பு இல்லங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள 59 இலங்கை பெண்களை விரைவில் நாட்டிற்கு அழைத்து வரவுள்ளதாக வௌிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். 

ஓமானுக்கு நான்கு நாட்கள் விஜயம் மேற்கொண்டுள்ள அமைச்சர் மனுஷ நாணயக்கார, அங்குள்ள பாதுகாப்பு இல்லங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள பெண்களை சந்தித்து கலந்துரையாடிய போதே இதனை குறிப்பிட்டுள்ளார்.

அந்நாட்டு தொழில் வழங்குநர்களுக்கு செலுத்த வேண்டிய கட்டணங்களை செலுத்தி, குறித்த பெண்களை விரைவில் நாட்டிற்கு அழைத்துவர ஜனாதிபதி அனுமதி வழங்கியுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

சட்ட சிக்கல்களை விரைவில் தீர்த்து, அவர்களை நாட்டிற்கு அழைத்துவர துரித நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் வௌிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.