43 வகையான புற்றுநோய் மருந்துகள் இறக்குமதி

43 வகையான புற்றுநோய் மருந்துகள் இறக்குமதி

by Staff Writer 08-02-2023 | 9:46 AM

Colombo (News 1st) பற்றாக்குறையாக காணப்பட்ட புற்றுநோய்க்கான 43 வகையான மருந்துப் பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ள இந்த மருந்துப் பொருட்களை சுங்கப் பிரிவினர் தற்போது சோதனைக்கு உட்படுத்தி வருவதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அதற்கமைய, எதிர்வரும் நாட்களில் இந்த மருந்துகளை வைத்தியசாலைகளுக்கு பகிர்ந்தளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார அமைச்சின் பேச்சாளர் ஒருவர் கூறினார்.

இதனிடையே, நாட்டில் தட்டுப்பாடாகவுள்ள 140 வகையான மருந்துப் பொருட்களுக்கு முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் விரைவில் அவற்றை இறக்குமதி செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.