உயிரிழப்பு எண்ணிக்கை 8,000 -ஐ அண்மித்தது

துருக்கி நிலநடுக்கம்: உயிரிழப்பு எண்ணிக்கை 8,000 -ஐ அண்மித்தது

by Staff Writer 08-02-2023 | 9:36 AM

Colombo (News 1st) துருக்கியில் பதிவாகிய நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8,000 -ஐ அண்மித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் வௌிநாடுகளின் உதவிகளுடன் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக துருக்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஐக்கிய நாடுகள் சபை, ஐரோப்பிய ஒன்றியம், நேட்டோ உள்ளிட்ட அமைப்புகளை போன்று அமெரிக்கா, பிரித்தானியா, சீனா, ரஷ்யா, இந்தியா, ஜப்பான், ஈரான், ஈராக், அவுஸ்திரேலியா, நியூஸிலாந்து, பிரேஸில், பாகிஸ்தான் உள்ளிட்ட பல நாடுகள் தருக்கி மற்றும் சிரியாவிற்கு தமது உதவிகளை வழங்கிவருகின்றனர்.

துருக்கி நேரப்படி நேற்று முன்தினம்(06) பிற்பகல் 1.30க்கு 7.5 மெக்னிடியூட் அளவிலான மற்றுமொரு பாரிய நிலநடுக்கம் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.