தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் P.S.M.சார்ள்ஸின் இராஜினாமா கடிதம் ஜனாதிபதியால் ஏற்றுக்கொள்ளப்பட்டது

தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் P.S.M.சார்ள்ஸின் இராஜினாமா கடிதம் ஜனாதிபதியால் ஏற்றுக்கொள்ளப்பட்டது

தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் P.S.M.சார்ள்ஸின் இராஜினாமா கடிதம் ஜனாதிபதியால் ஏற்றுக்கொள்ளப்பட்டது

எழுத்தாளர் Staff Writer

07 Feb, 2023 | 4:48 pm

Colombo (News 1st) தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் P.S.M. சார்ள்ஸின் இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஏற்றுக்கொண்டுள்ளார்.

அவர் தனது பதவி விலகல் கடிதத்தை கடந்த சில தினங்களுக்கு முன்னதாக ஜனாதிபதிக்கு அனுப்பியிருந்ததாகவும் குறித்த சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி அதனை ஏற்றுக்கொண்டிருக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

எவ்வாறாயினும், ஜனாதிபதி அவரது பதவி விலகல் கடிதத்தை ஏற்றுக்கொண்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு இன்று குறிப்பிட்டுள்ளது. 

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் ஒருவர் பதவி விலகினாலும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு பாதிப்பு ஏற்படாதென தெரிவிக்கப்பட்டுள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்