தென்னை மரத்திலிருந்து தவறி வீழ்ந்ததில் 3 பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு

தென்னை மரத்திலிருந்து தவறி வீழ்ந்ததில் 3 பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

07 Feb, 2023 | 10:39 am

Colombo (News 1st) மட்டக்களப்பு – சித்தாண்டி பகுதியில் மரத்திலிருந்து தவறி கீழே வீழ்ந்த ஒருவர் நேற்று(06) உயிரிழந்துள்ளார்.

வீட்டுத் தேவைக்கான தேங்காய் பறிப்பதற்காக தென்னை மரத்தில் ஏறிய போதே குறித்த நபர் தவறி வீழ்ந்து உயிரிழந்தாக பொலிஸார் தெரிவித்தனர்.

3 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த இடத்திற்கு திடீர் மரண விசாரணை அதிகாரி வருகை தந்து சடலத்தைப் பார்வையிட்டதை அடுத்து, பிரேத பரிசோதனைக்காக சடலம் மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இன்று(07) சட்ட வைத்திய அதிகாரியின் பரிசோதனை நிறைவடைந்ததன் பின்னர் சடலத்தை உறவினர்களுக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சந்திவௌி பொலிஸார் தெரிவித்தனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்