துருக்கி நிலநடுக்கத்தின் பின்னர் காணாமல் போன இலங்கை பெண்ணின் கையடக்கத் தொலைபேசி கண்டுபிடிப்பு

துருக்கி நிலநடுக்கத்தின் பின்னர் காணாமல் போன இலங்கை பெண்ணின் கையடக்கத் தொலைபேசி கண்டுபிடிப்பு

துருக்கி நிலநடுக்கத்தின் பின்னர் காணாமல் போன இலங்கை பெண்ணின் கையடக்கத் தொலைபேசி கண்டுபிடிப்பு

எழுத்தாளர் Staff Writer

07 Feb, 2023 | 12:22 pm

Colombo (News 1st) துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் பின்னர் காணாமல் போன இலங்கை பெண்ணின் கையடக்கத் தொலைபேசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக துருக்கிக்கான இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது

எனினும் குறித்த பெண் தொடர்பான எந்த தகவலும் இதுவரை கிடைக்கவில்லை என தூதரகத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அந்த பெண் தங்கியிருந்த கட்டடம் நிலநடுக்கத்தில் சேதமடைந்துள்ளதாக இதற்கு முன்னர் தகவல் கிடைத்த நிலையில், நிலநடுக்கம் ஏற்படுவதற்கு முன்னர் அங்கிருந்தவர்கள் குறித்த கட்டத்தில் இருந்து வௌியேறியுள்ளதாகவும் பின்னர் கையடக்கத் தொலைபேசி கண்டுபிடிக்கப்பட்டதாகவும் தூதரகத்தின் சிரேஷ்ட பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்