துருக்கி, சிரியா நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5000-ஐ கடந்தது; மீட்பு பணிகள் தீவிரம்

துருக்கி, சிரியா நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5000-ஐ கடந்தது; மீட்பு பணிகள் தீவிரம்

துருக்கி, சிரியா நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5000-ஐ கடந்தது; மீட்பு பணிகள் தீவிரம்

எழுத்தாளர் Bella Dalima

07 Feb, 2023 | 8:01 pm

Colombo (News 1st) துருக்கி மற்றும் சிரியாவில்  ஏற்பட்ட நிலநடுக்கத்தில்  காணாமல் போனவர்களைத் தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இரு நாடுகளிலும்  ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5000 ஐ கடந்துள்ளது. 

துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இதுவரையில் 4,300 பேர் உயிரிழந்துள்ளனர். 20 ஆயிரத்திற்கும்  அதிகமானவர்கள் காயமடைந்துள்ளதாக துருக்கியில் உள்ள இலங்கை தூதரகம் அறிவித்துள்ளது.

சிரியாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1200 ஆக அதிகரித்துள்ளது. கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றன. சுமார் 16 ஆயிரத்திற்கு அதிகமானவர்கள் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பலத்த மழை , குளிரான வானிலையினால் தேடுதல் நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 

இதனிடையே, துருக்கி – சிரியா நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின்  எண்ணிக்கை  மேலும் உயர்வடையலாம் என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு வௌிநாடுகள் பல முன்வந்துள்ளன.

மனிதாபிமான நடவடிக்கைகளுக்காக 10 மில்லியன் டொலர்கள் நன்கொடையாக வழங்குவதாக அவுஸ்திரேலியாவின் பிரதமர் Anthony Albanese தெரிவித்துள்ளார்.

1.5 மில்லியன் டொலரை துருக்கிக்கு வழங்கவுள்ளதாக நியூசிலாந்து அறிவித்துள்ளது.

தென் கொரியா, அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள் அனர்தத்திற்குள்ளான மக்களை மீட்பதற்கான உதவிகளை வழங்க முன்வந்துள்ளன.

உணவு , மருத்துவ வசதிகளை வழங்குவதற்காக ஈரான், ஈராக் விமானங்கள் சிரியாவை நோக்கி பயணித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள்  செய்தி வௌியிட்டுள்ளன.

அனைத்து உதவிகளும்  மத்திய அரசின் ஊடாக அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள் மற்றும் போராளிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளுக்கு சமமாக விநியோகிக்கப்படும் என சிரிய அரசாங்கம் அறிவித்துள்ளது.

இதனிடையே, துருக்கி உதவி கோரும் பட்சத்தில், படையினரை  அனுப்புவதற்கு தயாராக உள்ளதாக வௌிவிவகார அமைச்சர்  ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்தார். 300 படை வீரர்களைக் கொண்ட குழுவொன்று தயாராக உள்ளதாக  அவர் கூறினார்.  


துருக்கி – சிரியா நிலநடுக்கத்தை முன்கூட்டியே கணித்த டச்சு ஆய்வாளர்

துருக்கி – சிரியா நிலநடுக்கத்தை முன்கூட்டியே கணித்த டச்சு ஆய்வாளர்

துருக்கி – சிரியா நிலநடுக்கத்தை முன்கூட்டியே கணித்த டச்சு ஆய்வாளர்

எழுத்தாளர் Bella Dalima

07 Feb, 2023 | 4:10 pm

Colombo (News 1st) துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட  பயங்கர நிலநடுக்கத்தால் பலியானோர் எண்ணிக்கை 5,000 ஆக அதிகரித்துள்ள நிலையில், தொடர்ந்து அங்கு மூன்றாவது நாளாக இன்றும் நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது.

ஆயிரக்கணக்கானோர் காயமடைந்து சிகிச்சைகளுக்காக காத்திருக்கும் நிலையில், உலக நாடுகள் உதவிக்கரம் நீட்டி வருகின்றன.

துருக்கி மற்றும் சிரியாவில் அதிகாலை வேளையில், மக்கள் உறக்கத்தில் இருந்த போது நிலநடுக்கம் ஏற்பட்டதால், பலி எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

ஆனால், உலகையே துயரத்தில் ஆழ்த்தியிருக்கும் இந்த துருக்கி – சிரியா நிலநடுக்கம் தொடர்பாக ஒருவர் முன்கூட்டியே கணித்து எச்சரிக்கையும் விடுத்துள்ளார். 

இந்த கொடுந்துயரம் நடப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன்னதாக, Frank Hoogerbeets என்ற டச்சு விஞ்ஞானி, பெப்ரவரி 3ஆம் திகதியே இந்த அனர்த்தம் தொடர்பில் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

தென்-மத்திய துருக்கி, ஜோர்டான், சிரியா, லெபனான் பகுதிகளில் 7.5 ரிக்டர் அளவில் தற்போதோ அல்லது சில நாட்களிலோ நிலநடுக்கம் ஏற்படும் என அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். நிலநடுக்கத்தின் மையப்பகுதியின் வரைபடத்துடன் அவர் பதிவிட்டுள்ளார். 

அவரது ட்விட்டர் பக்கத்தில் அவரைப் பற்றிய தகவலில், நெதர்லாந்தில் உள்ள சூரிய முறையின் வடிவியல் ஆய்வு மையத்தில் பணியாற்றுவதாக தெரிவித்துள்ளார். 

அது மட்டுமல்லாமல், குறித்த சூரிய முறையின் வடிவியல் ஆய்வு மையம், பெப்ரவரி 4 முதல்  6 ஆம் திகதி வரையில் நிலநடுக்கங்கள் அதிகம் ஏற்படும் அபாயம் இருப்பதாகவும், இது ரிக்டர் அளவில் 6 புள்ளிகளை விடவும் அதிகமாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ள தகவலையும் Frank Hoogerbeets மீள் பதிவிட்டுள்ளார்.  

இந்த ட்விட்டர் பதிவு, துருக்கி, சிரியாவில் நிலநடுக்கங்கள் ஏற்பட்டு ஆயிரக்கணக்கான உயிர்கள் பலியான பிறகே வெளி உலகிற்கு தெரியவந்துள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்