மீட்பு பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க தயார்

துருக்கி எந்த சந்தர்ப்பத்தில் உதவி கோரினாலும் அதனை வழங்க இலங்கை தயார் - வௌிவிவகார அமைச்சர்

by Chandrasekaram Chandravadani 07-02-2023 | 11:45 AM

Colombo (News 1st) துருக்கி ஒத்துழைப்புகளுக்காக கோரிக்கை விடுக்கின்ற எந்த சந்தர்ப்பத்திலும் இராணுவ குழுவொன்றை அனுப்புவதற்கு தயார் என வௌிவிவகார அமைச்சர், ஜனாதிபதி சடத்தரணி அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

அதற்காக பொறியியலாளர்கள் மற்றும் வைத்தியத்துறை உறுப்பினர்கள் அடங்கிய சுமார் 300 இராணுவ வீரர்கள் தயார் நிலையில் உள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.