கும்புக்கன் ஆற்றில் வீழ்ந்த தந்தை, மகளை காணவில்லை

கும்புக்கன் ஆற்றில் வீழ்ந்த தந்தை, மகளை காணவில்லை

கும்புக்கன் ஆற்றில் வீழ்ந்த தந்தை, மகளை காணவில்லை

எழுத்தாளர் Staff Writer

07 Feb, 2023 | 7:36 pm

Colombo (News 1st) பொலன்னறுவை – தம்பால, கும்புக்கன் ஆற்றில் வீழ்ந்து தந்தையும் மகளும் காணாமல் போயுள்ளனர்.

கும்புக்கன் ஆற்றை பார்வையிடுவதற்காக இன்று காலை சென்ற போதே அவர்கள் இந்த அனர்த்தத்தை எதிர்நோக்கியுள்ளனர்.

Selfie எடுப்பதற்கு முயற்சித்த குறித்த சிறுமி ஆற்றுக்குள் தவறி வீழ்ந்துள்ளார்.

அவரை காப்பாற்றுவதற்கு தந்தை முயற்சித்த போது, இருவரும் நீரில் அள்ளுண்டு செல்லப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு – காத்தான்குடியை சேர்ந்த 46 வயதான தந்தையும் 12 வயதான மகளுமே நீரில் மூழ்கி காணாமற்போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

காணாமற்போன இருவரையும் தேடும் நடவடிக்கையில் பொலிஸாரும் பிரதேச மக்களும் ஈடுபட்டுள்ளனர்.
 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்