English
සිංහල
எழுத்தாளர் Bella Dalima
07 Feb, 2023 | 5:38 pm
Colombo (News 1st) தனது மனைவியுடன் தகாத தொடர்புகளை பேணியதாகக் கூறப்படும் இளைஞர் ஒருவரை 16 இடங்களில் கத்தியால் குத்தி கொலை செய்ததாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட இரண்டு பிள்ளைகளின் தந்தைக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க இன்று மரண தண்டனை விதித்தார்.
பிரதிவாதிக்கு எதிரான குற்றச்சாட்டு சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபணமாகியதாக தீர்மானித்த நீதிபதி, அசிக்க மதுக என்ற குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து தீர்பளித்துள்ளார்.
கொழும்பு முகத்துவாரத்தில் 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 12 ஆம் திகதி சதுன் பிரசாத் என்பவரை கொலை செய்த குற்றச்சாட்டில் சட்டமா அதிபரால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
உள்ளூராட்சி நிறுவனமொன்றில் பணியாற்றியதாகக் கூறப்படும் பிரதிவாதி, தொழிலுக்கு சென்று வீடு திரும்பிய போது மனைவி வீட்டில் இல்லாமையால் அவரை தேடிச் சென்றுள்ளார்.
இதன்போது, வாடகை முச்சக்கரவண்டியில் தனது மனைவி மற்றுமொருவருடன் சென்றதைக் கண்டு, அவர்களுடன் தகராறில் ஈடுபட்டதுடன், பின்னர் கொலை செய்யப்பட்ட நபரின் சடலம் வீதியிலிருந்து மீட்கப்பட்டதாக முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
21 Mar, 2023 | 07:20 PM
21 Mar, 2023 | 06:32 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS