.webp)
Colombo (News 1st) துருக்கியில் இன்று(06) பதிவாகிய பாரிய நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,400 ஆக அதிகரித்துள்ளது.
6,000 இற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
துருக்கி நேரப்படி இன்று(06) அதிகாலை 4.17 அளவில் 7.8 மெக்னிடியூட் அளவிலான பாரிய நிலநடுக்கம் பதிவாகியது.
சிரியாவிலும் அனர்த்தத்தினால் பாரிய அழிவுகள் ஏற்பட்டுள்ளதுடன், லெபனான் மற்றும் சைப்ரஸ் ஆகிய நாடுகளிலும் அதிர்வுகள் உணரப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.