மற்றொரு சர்வதேச நிகழ்ச்சிக்கு தயாராகும் ஸ்டெய்ன் கலையகம்...

by Staff Writer 06-02-2023 | 10:33 PM

Colombo (News 1st) நம்பிக்கை மலர்ந்து பதினான்கு வருடங்கள் ஆகின்றன.

இந்த நாட்டின் பார்வையாளர்களுக்காக ஸ்டெய்ன் கலையகம்(Stein Studios) வழங்கும் தயாரிப்புகளும் உருவாக்கும் நட்சத்திரங்களின் எண்ணிக்கையும் அதிகமாகும்.

தெற்காசியாவிலேயே அதி நவீன வசதிகளுடன் கூடிய ஸ்டெய்ன் கலையகத்தில் மேற்கொள்ளப்படும் தயாரிப்புகள் அளப்பரியவை.

சர்வதேச அளவில் புகழ்பெற்ற பட்டய நிகழ்சிகளும் அவற்றில் தனித்துவமானவை.

ஸ்டெய்ன் கலையகத்தில் ஒரே நேரத்தில் இதுபோன்ற 03 பட்டய நிகழ்ச்சிகள் தயாரிக்கப்பட்டமை இந்த நாட்டின் தொலைக்காட்சி வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயமாகும்.

ஸ்டெய்ன் கலையகத்தின் தயாரிப்பான "The voice” இலங்கை மக்களை கவர்த்துள்ள ஒரு நிகழ்ச்சியாகும்.

நாட்டின் இசைத் துறையில் பல நட்சத்திரங்களை உருவாக்கிய "The voice”, இம்முறை கட்டத்தின் உச்சத்தை நெருங்கி வருகிறது.

ஸ்டெய்ன் கலையகத்தின் மற்றுமொரு தயாரிப்பான ''Money Drop'' இந்த நாட்டு மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது.

ஸ்டெய்ன் கலையகம் மற்றொரு சர்வதேச பட்டய நிகழ்ச்சிக்கு தயாராகின்றது.

பெரியவர், சிறியவர் என அனைவராலும் விரும்பப்படும் இலட்சபதி திட்டத்தின் 10ஆவது கட்டம் இது.

''The Voice'', ''Money Drop'', ''Lakshapathi'' ஆகிய சர்வதேச பட்டய நிகழ்ச்சிகளை ஒரே நேரத்தில் தயாரித்து தொலைக்காட்சி வரலாற்றில் ஒரு புதிய பரிமாணத்திற்கு எடுத்துச்சென்ற பெருமை ஸ்டெய்ன் கலையகத்தை சாரும்...