.webp)
Colombo (News 1st) துருக்கியின் தென் கிழக்கு பிராந்தியத்தில் 7.5 மெக்னிடியூட் அளவிலான மற்றுமொரு நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
சிரிய எல்லைக்கு அருகாமையில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பில் இதுவரை தகவல்கள் வௌியாகவில்லை என அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, இன்று(06) அதிகாலை பதிவாகிய நிலநடுக்கங்களில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,500 ஐ தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.