.webp)
Colombo (News 1st) சமூக ஊடக செயற்பாட்டாளர் தர்ஷன ஹந்துன்கொடவிற்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
தர்ஷன ஹந்துன்கொட நேற்றிரவு(05) குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டார்.
தர்ஷன ஹந்துன்கொட துபாயிலிருந்து நாடு திரும்பிய சந்தர்ப்பத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து நேற்றிரவு கைது செய்யப்பட்டார்.