லாஃப்ஸ் எரிவாயு விலையும் அதிகரிப்பு

இன்று(06) நள்ளிரவு முதல் லாஃப்ஸ் எரிவாயு விலை அதிகரிப்பு

by Staff Writer 06-02-2023 | 2:32 PM

Colombo (News 1st) இன்று(06) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் லாஃப்ஸ்(Laugfs) சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்படவுள்ளது.

புதிய விலைகள் வருமாறு:

⭕ 12.5 கிலோகிராம் நிறையுடைய லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலை 200 ரூபாவால் அதிகரிப்பு (புதிய விலை 5,280 ரூபா)

⭕ 5 கிலோகிராம் லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலை 80 ரூபாவால் அதிகரிப்பு (புதிய விலை 2,112 ரூபா)

⭕ 2 கிலோகிராம் லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலை 32 ரூபாவால் அதிகரிப்பு (புதிய விலை 845 ரூபா) ஆகும்.

இதனிடையே, நேற்று(05) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் லிட்ரோ சமையல் எரிவாயு விலை அதிகரிக்கப்பட்டது.

புதிய விலைகள் வருமாறு:

⭕ 12.5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 334 ரூபாவால் அதிகரிப்பு (புதிய விலை 4,743 ரூபா) 

⭕ 05 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 134 ரூபாவால் அதிகரிப்பு (புதிய விலை 1,904 ரூபா) 

⭕ 2.3 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை  61 ரூபாவால் அதிகரிப்பு (புதிய விலை 883 ரூபா)  ஆகும்.