யாழ்.கீரிமலை நகுலேஸ்வரர் ஆலய கொடியேற்றம்

by Staff Writer 05-02-2023 | 4:06 PM

Colombo (News 1st) வரலாற்று சிறப்புமிக்க பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றான யாழ்.கீரிமலை நகுலேஸ்வர ஆலயத்தின் கொடியேற்றம் இன்று(05) காலை இடம்பெற்றது.

விநாயகப் பெருமான் மற்றும் நகுலாம்பிகை சமேத நகுலேஸ்வர சுவாமி மற்றும் முருகப் பெருமான் வள்ளி தெய்வானை, சண்டேஸ்வரமூர்த்தி ஆகியோருக்கு வசந்த மண்டப பூஜைகள் இடம்பெற்று மூர்த்திகள் உள் வீதி எழுந்தருளினர்.

மங்கள வாத்தியங்கள் முழங்க பிராமணர்களின் வேதபாராயண மந்திர உச்சாடனங்களுடன் நகுலேஸ்வரப் பெருமானின் கொடியேற்றம் இனிதே இடம்பெற்றது.

15 நாட்களுக்கு இடம்பெறும் மகோற்சவத்தில் எதிர்வரும் 17ஆம் திகதி சப்பறத் திருவிழாவும் 18ஆம் திகதி சிவராத்திரி தினத்தன்று தேர் திருவிழாவும் 19ஆம் திகதி தீர்த்தோற்சவமும் இடம்பெறவுள்ளது.