நீரில் மூழ்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பலி

சிலாபத்தில் நீரில் மூழ்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உயிரிழப்பு

by Staff Writer 05-02-2023 | 7:31 PM

Colombo (News 1st) சிலாபம் முகத்துவரத்திற்கு அருகில் நீராடச் சென்ற மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 35 வயதான தந்தை, 06 வயதான மகள் மற்றும் 07 வயதான உறவுக்கார சிறுவனுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

அவர்கள் சிலாபம் முகத்துவாரத்திற்கு அருகே நீராடச் சென்றிருந்ததாகவும் இதன்போது நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.