இந்திய அரசினால் இலங்கைக்கு 50 புதிய பஸ்கள்

இந்திய அரசினால் இலங்கைக்கு 50 புதிய பஸ்கள்

இந்திய அரசினால் இலங்கைக்கு 50 புதிய பஸ்கள்

எழுத்தாளர் Staff Writer

05 Feb, 2023 | 5:21 pm

Colombo (News 1st) இந்திய அரசினால் இலங்கைக்கு வழங்கப்படவுள்ள 500 பஸ்களில் 50 பஸ்கள் இன்று(05) காலை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டன.

எமது நாட்டிலுள்ள கிராமப் புறங்களின் பொது போக்குவரத்து சேவையை வலுப்படுத்தும் நோக்கில் இந்த பஸ்கள் வழங்கப்பட்டுள்ளன. 

இது தொடர்பான ஆவணங்களை இலங்கைக்கான இந்திய தூதுவர் கோபால் பாக்லே, ஜனாதிபதியிடம் கையளித்தார்.

கிராம மக்களின் போக்குவரத்துத் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் இந்த பஸ்களை நாடளாவிய ரீதியில் சேவையில் ஈடுபடுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆலோசனை வழங்கியுள்ளார். 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்