.webp)
Colombo (News 1st) பொதுமக்களுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தும் வகையில், பேரணிகள் மற்றும் எதிர்ப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதை தடுத்து, அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் உள்ளிட்ட தரப்பினருக்கு எதிராக நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மிரிஹானை தலைமையக பொலிஸாரால் நுகேகொடை நீதவான் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைக்கு அமைவாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், அமைதியான முறையில் எதிர்ப்பு நடவடிக்கையை முன்னெடுப்பதற்கு இந்த தடை உத்தரவின் ஊடாக எவ்வித இடையூறுகளும் இல்லையென குறிப்பிடப்பட்டுள்ளது.