ஹெங்கமுவ கிராம மக்களின் குடிநீர் பிரச்சினைக்கு கம்மெத்தவினால் தீர்வு

ஹெங்கமுவ கிராம மக்களின் குடிநீர் பிரச்சினைக்கு கம்மெத்தவினால் தீர்வு

எழுத்தாளர் Bella Dalima

04 Feb, 2023 | 5:12 pm

Colombo (News 1st) குருநாகல் – கொபெய்கனை, ஹெங்கமுவ கிராம மக்கள் நீண்ட காலமாக எதிர்நோக்கி வந்த சுத்தமான குடிநீர் பிரச்சினைக்கு 75 ஆவது சுதந்திர தினமாகிய இன்று கம்மெத்தவினால் தீர்வு வழங்கப்பட்டது.

குருநாகல் மாவட்டத்தின் கொபெய்கனை பிரதேச செயலாளர் பிரிவில் ஹெங்கமுவ கிராமம் அமைந்துள்ளது. 

விவசாயத்தை ஜீவனோபாயமாகக் கொண்ட 300-க்கும் அதிகமான குடும்பங்களை சேர்ந்தவர்கள் இங்கு வாழ்ந்து வருகின்றனர். 

சுத்தமான குடிநீரை பெற்றுக்கொள்வதே இந்த மக்களுக்கு காணப்படும் மிகப்பெரிய சவாலாகும்.

இங்கு கிடைக்கும் உவர் நீர் கிராமத்திலுள்ள பலரை நோயாளிகளாக்கியுள்ளது. 

இந்த பிரச்சினையை அறிந்துகொண்ட கம்மெத்த, மக்களுக்கான தீர்வினை பெற்றுக்கொடுப்பதற்கு முன்வந்தது. 

சுகாதார அமைச்சின் சிறுநீரக நோய் பிரிவு மற்றும் ஆராய்ச்சி பிரிவின் ஒத்துழைப்புடன் இலங்கை கடற்படையின் தொழில்நுட்ப பிரிவின் ஆதரவுடன் நிர்மாணிக்கப்பட்ட நீர் சுத்திகரிப்பு கட்டமைப்பு  மக்களுக்கு கையளிக்கப்பட்டது. 

கலாநிதி M.U.A.தென்கோன் மற்றும் தேவிங்கா புஸ்வெல்ல இந்த குடிநீர் திட்டத்திற்கு அனுசரணை வழங்கினர். 

இதன் மூலம் ஹெங்கமுவ கிராம மக்களுக்கும் கிராமத்தை சுற்றியுள்ள பாடசாலை மாணவர்களுக்கும் சுத்தமான குடிநீரை பெற்றுக்கொள்ள வாய்ப்புக் கிட்டியுள்ளது.

மேலும், கம்மெத்த தனது தசாப்தகால மக்கள் சேவையின் மகிழ்ச்சியுடன், சுதந்திர தின வைபவத்தை ​ஹெங்கமுவ மக்களுடன் இணைந்து கண்கவரும் விதத்தில் கொண்டாடியது.

 

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்