மருதானையில் சத்தியாகிரகத்தில் ஈடுபட்ட நால்வர் கைது

மருதானையில் சத்தியாகிரகத்தில் ஈடுபட்ட நால்வர் கைது

எழுத்தாளர் Bella Dalima

04 Feb, 2023 | 3:46 pm

Colombo (News 1st) மருதானை எல்பின்ஸ்டன் கலையரங்கிற்கு அருகில் சுதந்திரத்திற்கான சத்தியாகிரகத்தில் ஈடுபட்ட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்றிரவு கைது செய்யப்பட்டவர்களில் பெண் ஒருவரும் அடங்குவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார்.

சுதந்திரத்திற்கான சத்தியாகிரகத்தை கலைக்க பொலிஸார் நேற்றிரவு நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டனர்.

பெருந்தொகை பணச்செலவில் சுதந்திர தினம் கொண்டாடப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நேற்று மாலை முதல் சுதந்திரத்திற்கான சத்தியாகிரக போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்