யாழ்ப்பாணத்தில் 108 ஏக்கர் காணி விடுவிப்பு

by Bella Dalima 03-02-2023 | 8:08 PM

Colombo (News 1st) இலங்கையின் 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு யாழ். வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்திற்குட்பட்ட13 ஏக்கர் அரச காணி உள்ளிட்ட 108 ஏக்கர் காணி இன்று விடுவிக்கப்பட்டது

யாழ் - பலாலி, அந்தோனிபுரத்தில் நடைபெற்ற நிகழ்வில் காணி விடுவிப்பிற்கான உத்தரவு பத்திரத்தினை யாழ். மாவட்ட இராணுவத் தளபதி பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சுவர்ண போதோட்ட,  யாழ். மாவட்ட செயலாளர் அம்பலவாணர் சிவபாலசுந்தரனிடம் கையளித்தார்.

இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்த 80 ஏக்கர் காணியும் கடற்படையின் கட்டுப்பாட்டில் இருந்த 28 ஏக்கர் காணியுமாக 108 ஏக்கர் காணி இன்று விடுவிக்கப்பட்டுள்ளது.

காங்கேசன்துறை - மத்தியில்  50.59 ஏக்கரும் மயிலிட்டி வடக்கில் 16.55 ஏக்கரும் தென்மயிலை பகுதியில் 0.72 ஏக்கரும் பலாலி  வடக்கில் 13.033 ஏக்கரும் நகுலேஷ்வரம் பகுதியில் 28 ஏக்கரும் விடுவிக்கப்பட்டுள்ளது.

காணி விடுவிப்பு நிகழ்வில் அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

இதனிடையே, நகுலேஷ்வரத்தில் விடுவிக்கப்பட்ட 28 ஏக்கர் காணியை பொதுமக்கள் பார்வையிட்டனர்.
 

ஏனைய செய்திகள்