மருதானையில் ‘சுதந்திரத்திற்கான சத்தியாகிரகம்’

மருதானையில் ‘சுதந்திரத்திற்கான சத்தியாகிரகம்’

எழுத்தாளர் Bella Dalima

03 Feb, 2023 | 7:51 pm

Colombo (News 1st) பாரிய செலவில் கொண்டாடப்படவுள்ள 75 ஆவது சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மருதானை எல்பின்ஸ்டன் திரையரங்கிற்கு முன்பாக சத்தியாகிரகப் போராட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

'சுதந்திரத்திற்கான சத்தியாகிரகம்' என இதற்கு பெயரிடப்பட்டுள்ளது. 

காலி முகத்திடல் போராட்டக்களத்தில் பங்கேற்றோரும் சில சிவில் அமைப்புகளை சேர்ந்தவர்களும் சத்தியாகிரகத்தில் பிரசன்னமாகியிருந்தனர். 

சத்தியாகிரகம் இடம்பெறும் மருதானை எல்பின்ஸ்டன் திரையரங்கிற்கு முன்பாக பொலிஸார் திரண்டிருந்ததுடன், நீர்த்தாரை வாகனங்களும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

சத்தியாகிரகம் நாளை (04) மாலை 3.30 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்