காலி முகத்திடல், அதனை அண்மித்த பகுதிகளுக்குள் பிரவேசிக்க தடை

காலி முகத்திடல், அதனை அண்மித்த பகுதிகளுக்குள் பிரவேசிக்க தடை

காலி முகத்திடல், அதனை அண்மித்த பகுதிகளுக்குள் பிரவேசிக்க தடை

எழுத்தாளர் Bella Dalima

03 Feb, 2023 | 7:07 pm

Colombo (News 1st) அனுமதி பெறாத நபர்கள் காலி முகத்திடல் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளுக்குள் பிரவேசிப்பதை தடுக்கும் வகையில் கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. 

இன்று (03) பிற்பகல் முதல் நாளை 75 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் நிறைவடையும் வரையில் குறித்த பகுதிகளுக்குள் பிரவேசிக்க தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

கோட்டை பொலிஸார் முன்வைத்த கோரிக்கையை ஆராய்ந்த பின்னர் நீதவான் திலின கமகே இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
 
சுதந்திர தின நிகழ்வுகளில் தேசிய மற்றும் சர்வதேச பிரமுகர்கள் பலர் கலந்துகொள்ளவுள்ளமையினால், அவர்களின் பாதுகாப்புக் கருதியும் நிகழ்வுகளுக்கு இடையூறு ஏற்படக்கூடிய சாத்தியம் இருப்பதாலும் தடை பிறப்பிக்குமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்திருந்தனர். 
 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்