இறையாண்மை பத்திரங்களை கொள்வனவு செய்தோர் கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகளில் பங்கேற்க தயார்

இறையாண்மை பத்திரங்களை கொள்வனவு செய்தோர் கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகளில் பங்கேற்க தயார்

எழுத்தாளர் Bella Dalima

03 Feb, 2023 | 8:15 pm

Colombo (News 1st) இலங்கையினால் வழங்கப்பட்ட இறையாண்மை பத்திரங்களை கொள்வனவு செய்த தரப்பினர், கூட்டாக கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகளில் பங்கேற்க தயாராக இருப்பதாக சர்வதேச நாணய நிதியத்திற்கு அறிவித்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின்  முகாமைத்துவ பணிப்பாளருக்கு கடிதம் ஒன்றின் மூலம் அவர்கள் இதனை அறிவித்துள்ளனர்.

எனினும், அவர்கள் அதில் பல நிபந்தனைகளையும் விதித்துள்ளனர்.

நாட்டின் கடன் நிலைத்தன்மை , நிதி ஸ்திரத்தன்மையைப் பாதுகாக்கும் வகையில் உள்நாட்டுக் கடனை மறுசீரமைப்பது முக்கிய நிபந்தனைகளில் ஒன்றாகும்.

2027 முதல் 2032 வரையிலான காலகட்டத்திற்கு ஏற்றாற்போன்று, உள்நாட்டு நிதியுதவியை மொத்த தேசிய உற்பத்தியின் 8.5 வீதமாக வரையறுக்க வேண்டும் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்