பாரிய தாக்குதலுக்கு தயாராகும் ரஷ்யா – உக்ரைன் பாதுகாப்பு அமைச்சர் எச்சரிக்கை

பாரிய தாக்குதலுக்கு தயாராகும் ரஷ்யா – உக்ரைன் பாதுகாப்பு அமைச்சர் எச்சரிக்கை

பாரிய தாக்குதலுக்கு தயாராகும் ரஷ்யா – உக்ரைன் பாதுகாப்பு அமைச்சர் எச்சரிக்கை

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

02 Feb, 2023 | 10:00 am

Colombo (News 1st) பாரிய தாக்குதலொன்றுக்கு ரஷ்யா தயாராகி வருவதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

இம்மாதம் 24ஆம் திகதி இந்த தாக்குதல் நடத்தப்படலாம் என உக்ரைன் பாதுகாப்பு அமைச்சர் ஒலெக்ஸி ரெஸ்னிகொவ்(Oleksii Reznikov) எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த ஆண்டு ஆக்கிரமிப்பை ஆரம்பித்த தினத்தைக் குறிக்கும் வகையில் புதிதாக எதையாவது செய்வதற்கு ரஷ்யா தயாராகி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்காக ஆயிரக்கணக்கான படையினரை ரஷ்யா குவித்துள்ளதாக உக்ரைன் பாதுகாப்பு அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

ரஷ்ய இராணுவத்தினரால் கொண்டாடப்படும் தந்தை நாடு தினம் எதிர்வரும் 23ஆம் திகதி கொண்டாடப்படவுள்ள நிலையில், அதனையும் அடையாளப்படுத்தும் வகையில் புதிய தாக்குதல் நடத்தப்படலாம் என அமைச்சர் ஒலெக்ஸி ரெஸ்னிகொவ் தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்